text
stringlengths 13
771
| gender
int64 0
1
| audio_path
stringlengths 37
37
|
---|---|---|
புலவர்கள், மன்னருக்கு வாழி கூறிக் கோஷித்துக் கொண்டு, புறப்பட்டுச் சென்றார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000200.wav |
குந்தவை தேவிக்குக் கொண்டுவந்த ஓலையைக் காணாததால் மனக்கலக்கம் அடைந்திருந்த வல்லவரையன். | 0 | data/tamil_tts_wavs/female_000201.wav |
வல்லவரையன், நல்ல பலசாலிதான், ஆயினும், அந்த வஜ்ரப் பிடியின் வேகம், அவன் உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரையில், ஒரு குலுக்குக் குலுக்கி, அவனை செயலிழந்து நிற்கும்படி செய்துவிட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_000202.wav |
அத்தகைய மரணத்துக்கு சிறிதும் அஞ்ச மாட்டேன், சோர்வும் கொள்ள மாட்டேன், உற்சாகத்துடன் வரவேற்பேன். | 0 | data/tamil_tts_wavs/female_000203.wav |
என்னுடைய பெரிய தகப்பனார், இராஜாதித்தியர், தக்கோலத்தில், யானைமேலிருந்து போர் புரிந்தபடியே, உயிர் நீத்தார். | 0 | data/tamil_tts_wavs/female_000204.wav |
ஸ்தல யாத்திரை செய்வதற்கு, மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். | 0 | data/tamil_tts_wavs/female_000205.wav |
அங்கேயே காலமானார், மேற்கெழுந்தருளிய தேவர், என்று, அவரும் பெயர் பெற்றார். | 0 | data/tamil_tts_wavs/female_000206.wav |
எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில், ஒரு சிறு பகுதியையாவது, அடியேனுக்குத், திருப்பிக் கொடுக்க அருள் புரிய வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000207.wav |
இந்த பிள்ளை, பிறந்தவுடனே சரஸ்வதி தேவி, இவனுடைய நாவில் எழுதி விட்டாள் போலும், இவனுடைய வாக்குவன்மை, அதிசயமாயிருக்கிறது என்றாள் தேவி. | 0 | data/tamil_tts_wavs/female_000208.wav |
இதுதான் சமயம் என்று வந்தியத் தேவன், தாயே, தாங்கள் எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தை சொல்லவேணும். | 0 | data/tamil_tts_wavs/female_000209.wav |
பக்தனுக்குப் பரிந்து பார்வதி தேவி, பரமசிவனாரிடமும், லக்ஷ்மிதேவி, மகாவிஷ்ணுவிடமும், பேசுவதுபோல், தாங்கள் எனக்காகப் பேச வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000210.wav |
சக்கரவர்த்தி, இளவரசரைக் கேட்டால், பழுவூர்த் தேவரைக் கேட்க வேண்டும், என்று சொல்கிறார், பழுவூர்த் தேவரோ, இளவரசரைக் கேட்க வேண்டும் என்கிறார். | 0 | data/tamil_tts_wavs/female_000211.wav |
வடதிசையில், நம் பகைவர்கள், இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே, பார்த்திபேந்திரனும், மலையமானும், அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000212.wav |
அது மட்டுமல்ல ஈழநாட்டுக்குச் சென்றிருக்கும், இளங்கோவையும், உடனே இங்கு வந்து சேரும்படி, அழைப்பு அனுப்ப வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000213.wav |
அருள்மொழி, இங்கு வரும்போது, ஈழப்படைக்கு உணவு அனுப்புவது பற்றி, உங்கள் ஆட்சேபத்தையும், அவனிடம் தெரிவிக்கலாம். | 0 | data/tamil_tts_wavs/female_000214.wav |
தனதான்யாதிகாரியும், ஆட்சேபிக்கவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000215.wav |
நம்முடைய மக்களுக்கே, போதாமலிருக்கும்போது, இலங்கைக்குக் கப்பல் கப்பலாக அரிசி அனுப்புவதை, மக்கள் ஆட்சேபிக்கிறார்கள், தற்போது, வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000216.wav |
தங்கள் உடல்நிலையைப் பாதிக்கும்படி, இந்த அரண்மனைக்குள்ளேயும், அவர்களுடைய கூச்சல் வந்து கேட்கும். | 0 | data/tamil_tts_wavs/female_000217.wav |
அவர் எப்போது திருப்புகிறார், இன்று இரவு, கட்டாயம் வந்துவிடுவார், காஞ்சிக்கும், நாளைய தினம், ஓலை எழுதி அனுப்பலாம். | 0 | data/tamil_tts_wavs/female_000218.wav |
அப்படியே செய்க. | 0 | data/tamil_tts_wavs/female_000219.wav |
மன்னிக்க வேணும், தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது, என்று சொன்னார். | 0 | data/tamil_tts_wavs/female_000220.wav |
சித்திர மண்டபம், சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைத் தம்முடன், ஆஸ்தான மண்டபத்துக்கு, அழைத்துப் போனார். | 0 | data/tamil_tts_wavs/female_000221.wav |
சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி, அவனுக்கு அனுமதி அளித்தது, ஒருவேளை தவறோ, என்றும் தோன்றியது. | 0 | data/tamil_tts_wavs/female_000222.wav |
வந்தியத்தேவனும், ஏவலாளனும், வெளியே சென்ற உடன், இன்னொருவன், தளபதியிடம், பயபக்தியுடன் நெருங்கி, ஒரு ஓலைச் சுருளை நீட்டினான். | 0 | data/tamil_tts_wavs/female_000223.wav |
நல்ல உடைகளை அணிந்து கொள்வதில், பிரியமுள்ள வந்தியத்தேவனும், குதூகலத்தில் ஆழ்ந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000224.wav |
சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் தீட்டியிருந்த, அற்புதமான சித்திரங்களைப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000225.wav |
சோழ வம்சத்தின், பூர்வீக அரசர்களையும், அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும், சித்தரிக்கும் காட்சிகள், அவனுடைய கவனத்தைக் கவர்ந்து, பரவசமடையச் செய்தன. | 0 | data/tamil_tts_wavs/female_000226.wav |
இந்தக் கட்டத்தில், சென்ற நூறு வருஷமாகப் பழையாறையிலும், தஞ்சையிலும் இருந்து, அரசு புரிந்த சோழ மன்னர்களின், வம்ச பரம்பரையை, வாசகர்களுக்குச் சுருக்கமாக, ஞாபகப்படுத்த விரும்புகிறோம். | 0 | data/tamil_tts_wavs/female_000227.wav |
தொண்ணூற்றாறு போர் காயங்களைத் தன் திருமேனியில், ஆபரணங்களாகப் பூண்ட, விஜயாலய சோழனைப் பற்றி, முன்னமே கூறியிருக்கிறோம். | 0 | data/tamil_tts_wavs/female_000228.wav |
பிறகு, பல்லவன் அபராஜிதவர்மனோடு போர்தொடுத்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000229.wav |
காவிரி ஆறு உற்பத்தியாகும், சஹஸ்ய மலையிலிருந்து, அப் புண்ணிய நதி கடலில் கலக்கும் இடம் வரையில், ஆதித்த சோழன், பல சிவாலயங்களை எடுப்பித்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000230.wav |
இச்சமயத்தில் புலிச் சின்னம் பொறித்த, கரிகால் பெருவளத்தானுக்குப் பின்னர், சோழ வம்சத்தில், மாபெரும் மன்னன் பராந்தகன்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000231.wav |
வீர நாராயணன், பண்டித வத்சலன், குஞ்சர மல்லன், சூரசிகாமணி, என்பன போன்ற, பல பட்டப் பெயர்கள், அவனுக்கு உண்டு. | 0 | data/tamil_tts_wavs/female_000232.wav |
இந்த முதற் பராந்தகன் காலத்திலேயே, சோழ சாம்ராஜ்யம், கன்யாகுமரியிலிருந்து, கிருஷ்ணா நதி வரையில் பரவியத். | 0 | data/tamil_tts_wavs/female_000233.wav |
அந்த நாளில், வடக்கே பெருவலி படைத்திருந்த இராஷ்டிரகூடர்கள், சோழர்களுடைய பெருகி வந்த பலத்தை, ஒடுக்க முனைந்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000234.wav |
வடநாட்டுப் படையெடுப்பை எதிர்பார்த்து, இராஜாதித்யன், திருமுனைப்பாடி, நாட்டில் பெரும் சைன்யத்துடன் பல காலம் தங்கியிருந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000235.wav |
இவனும், பல்லவ அபராஜிதவர்மனைப் போல், யானை மீதிருந்து, போர் புரிந்து, யானை மேலிருந்தபடியே, இறந்தபடியால், இவனை, ஆனைமேல் துஞ்சிய தேவன், என்று, கல்வெட்டுச் சாஸனங்கள் போற்றிப், புகழ்கின்றன. | 0 | data/tamil_tts_wavs/female_000236.wav |
இராஜாதித்யன் மட்டும் இறந்திராவிட்டால், அவனே பராந்தக சக்கரவர்த்திக்குப், பிறகு சோழ சிம்மானம், ஏறியிருக்க வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000237.wav |
சீரான்மல்கு தில்லைச் செம்போன், அம்பலத்தாடி தன்னைக் காரார், சோலைக்கோழி வேந்தன், தஞ்சையோர்கோன் கலந்த ஆராவின், சொற் கண்டராதித்தன், அருந்தமிழ் மாலை வல்லவர். | 0 | data/tamil_tts_wavs/female_000238.wav |
பேரா உலகிற் பெருமை யோடும், பேரின்ப மெய்துவரே. | 0 | data/tamil_tts_wavs/female_000239.wav |
இராஷ்டிரகூடர் படையெடுப்பைத் தென்பெண்ணைக்கு அப்பாலே தடுத்து நிறுத்தினான். | 0 | data/tamil_tts_wavs/female_000240.wav |
இவருடைய மூத்த மனைவி, இவர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பே காலமாகிவிட்டாள். | 0 | data/tamil_tts_wavs/female_000241.wav |
ஆனால், இவருடைய தம்பி, அரிஞ்சயனுக்கோ, அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும், சிறந்த புதல்வன் இருந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000242.wav |
கேவலம், இந்த உலக சாம்ராஜ்யத்தைக் காட்டிலும், சிவலோக சாம்ராஜ்யம், எவ்வளவோ மேலானது, என்று, நம்பியவர்களாதலால். | 0 | data/tamil_tts_wavs/female_000243.wav |
கண்டராதித்தருக்குப் பிறகு, அதிக காலம், பரகேசரி அரிஞ்சயன், ஜீவிய வந்தனாக இருக்கவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000244.wav |
பின்னர், இளவரசர் சுந்தர சோழருக்கு, நாட்டாரும் சிற்றரசர்களும், பிற அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து, முடிசூட்டி மகிழ்ந்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000245.wav |
இராஜகேசரி சுந்தர சோழரும், அதிர்ஷ்ட வசத்தினால், தமக்குக் கிடைத்த மகத்தான பதவியைத் திறம்படச் சிறப்பாக வகித்தார். | 0 | data/tamil_tts_wavs/female_000246.wav |
அவர்கள் சென்ற போர் முனைகளிளெல்லாம், விஜயலக்ஷ்மி, சோழர்களின் பக்கமே, நிலைநின்று வந்தாள். | 0 | data/tamil_tts_wavs/female_000247.wav |
திருடர், திருடர், விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தரசோழர் வரையில், சோழ மன்னர்களின், உயிர்ச் சித்திரங்களை, நம் வீரன், வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000248.wav |
ஆஹா, இவர்களில் ஒவ்வொருவரும், எப்பேர்ப்பட்டவர்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000249.wav |
இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு, இன்று, அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம், பாக்கியம் செய்த நாடுகள்தாம். | 0 | data/tamil_tts_wavs/female_000250.wav |
மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச், சித்தரித்த காட்சிகளில், இன்னொரு முக்கியமான அம்சத்தை, வந்தியத்தேவன் கவனித்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000251.wav |
முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு, முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். | 0 | data/tamil_tts_wavs/female_000252.wav |
ஆதித்த சோழன் தலையில், கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்தித்தவர், ஒரு பழுவேட்டரையர். | 0 | data/tamil_tts_wavs/female_000253.wav |
அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள், இன்று சோழ நாட்டில், இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக், காரணம் இல்லாமற் போகவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000254.wav |
பெரியவர் வந்துவிட்டால், அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும். | 0 | data/tamil_tts_wavs/female_000255.wav |
தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே, தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து, புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000256.wav |
வந்த உடனே தருகிறோம், அதெல்லாம் முடியாது, நீங்கள் திருடர்கள், என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன். | 0 | data/tamil_tts_wavs/female_000257.wav |
உடனே கொண்டு வாருங்கள், இல்லாவிட்டால். | 0 | data/tamil_tts_wavs/female_000258.wav |
ஆனால் இதுதான் தஞ்சாவூர், ஞாபகம் இருக்கட்டும், அடே, என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா, இல்லையா. | 0 | data/tamil_tts_wavs/female_000259.wav |
இருந்தால்தானே தம்பி, கொண்டு வருவேன், அந்த அழுக்குத் துணிகளை, வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோம், முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா. | 0 | data/tamil_tts_wavs/female_000260.wav |
இன்னொருவன், வந்தியத்தேவனுடன், மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல், இரண்டு கைகளையும், முன்னால் நீட்டிக் கொண்டுவந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000261.wav |
மூன்று பேரும், சட் புட்டென்று எழுந்து, மறுபடியும், வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு, வளைத்துக்கொண்டு வந்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000262.wav |
வந்தியத்தேவன், தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் திருடர்கள், திருடர்கள், என்று சத்தமிட்டுக் கொண்டே, அவர்கள் மீது பாய்ந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000263.wav |
எங்கள் தொண்டை மண்டலத்தில், இப்படிப்பட்ட திருடர்களை, உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறு காரியம் பார்ப்போம், என்று சரமாரியாகப் பொழிந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000264.wav |
எஜமானே, தாங்கள் சொன்னது, சொன்னபடியே செய்தோம். | 0 | data/tamil_tts_wavs/female_000265.wav |
இவரை எண்ணெய் முழுக்காட்டிப், புதிய ஆடைகளையும், ஆபரனங்களையும் அணிவித்தோம், அறுசுவை உண்டி அளித்தோம். | 0 | data/tamil_tts_wavs/female_000266.wav |
போதும் உங்கள் வீரப் பிரதாபம், நிறுத்துங்கள், தம்பி, நீ என்ன சொல்லுகிறாய், இவர்களுக்கு அனுமதி கொடுங்கள், என்றுதான் சொல்கிறேன். | 0 | data/tamil_tts_wavs/female_000267.wav |
சோழ குலத்துப் பகைவர்களோடு, போராடிக் கொஞ்சம் நாள் ஆயிற்று. | 0 | data/tamil_tts_wavs/female_000268.wav |
தோள்கள், தினவெடுக்கின்றன, அரண்மனை விருந்தாளிகளை, எப்படி நடத்த வேண்டுமென்று, இவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன், என்றான் நமது வீரன். | 0 | data/tamil_tts_wavs/female_000269.wav |
சின்னப் பழுவேட்டரையர், புன்னகை புரிந்து, தம்பி, உன் தோள் தினவைத் தீர்த்துக்கொள்வதைச், சோழப் பகைவர்களோடேயே வைத்துக்கொள். | 0 | data/tamil_tts_wavs/female_000270.wav |
எங்கேடா அவை, எஜமான், தங்கள் கட்டளைப்படி, பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். | 0 | data/tamil_tts_wavs/female_000271.wav |
தளபதி காவலர்களைப் பார்த்து, முட்டாள்களா, இந்தப் பிள்ளைக்கு புது ஆடைகள் கொடுக்கும்படி மட்டுந்தானே சொன்னேன், பழையவைகளைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே. | 0 | data/tamil_tts_wavs/female_000272.wav |
தளபதி, நான் இளவரசர் கரிகாலனுடைய தூதன், பிறரிடம் கை நீட்டிப் பணம் பெறும் வழக்கம் என்னிடம் கிடையாது. | 0 | data/tamil_tts_wavs/female_000273.wav |
அப்படியானால், உன்னுடைய உடைகளையும், அதற்குள்ளிருந்த பொற்காசுகளையும், திருப்பி உன்னிடம் சேர்ப்பிக்கச் செய்கிறேன். | 0 | data/tamil_tts_wavs/female_000274.wav |
ஆகா, உனக்கு எத்தனை கோபம் வருகிறது, எங்கே, யாரிடத்தில் பேசுகிறோம், என்பதை மறந்துவிட்டே பேசுகிறாய். | 0 | data/tamil_tts_wavs/female_000275.wav |
சக்கரவர்த்தியின் க்ஷேமத்தைக் கருதித்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000276.wav |
அது எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை, ஆம், தம்பி, பழையாறையிலிருந்து, சக்கரவர்த்தியை நாங்கள் இங்கே அழைத்துவந்து, கட்டுக் காவலுக்குள் வைத்திராவிட்டால், இத்தனை நாளும், என்ன விபரீதம் நடந்திருக்குமோ, தெரியாது. | 0 | data/tamil_tts_wavs/female_000277.wav |
என்ன பொருள்கள், என்று இன்னமும் நீ சொல்லவில்லையே, சொல்லத்தான் வேண்டுமானால் சொல்லுகிறேன். | 0 | data/tamil_tts_wavs/female_000278.wav |
இன்னொரு ஓலையா, யாருக்கு, நீ சொல்லவே இல்லையே, அந்தரங்கமானபடியால் சொல்லவில்லை, நீங்கள் இப்போது வற்புறுத்துகிறபடியால், சொல்லுகிறேன். | 0 | data/tamil_tts_wavs/female_000279.wav |
அவனுடைய கண்களோ, அப்புறமும், இப்புறமும், நாலாபுறமும், கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்தன. | 0 | data/tamil_tts_wavs/female_000280.wav |
ஆகா, தப்புவதற்கு, இதைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் என்ன, பின்னோடு வருகிறவர்கள், அவ்வளவு சுலபத்தில் தன்னை விட்டுவிடமாட்டார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000281.wav |
கடவுளே பார்த்துக் காட்டியிருக்கும் இந்த வழியை, உபயோகித்துக் கொள்ளாவிட்டால், தன்னைப் போன்ற மூடன், வேறு யாரும் இல்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000282.wav |
கூட்டம் மேலே போகப் போக, இவனும் ஒரே இடத்தில் நில்லாமல், மேலும் கீழும், அப்பாலும் இப்பாலும், நகர்ந்து கொண்டிருந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000283.wav |
வேளக்காரப் படை வீரர்களைக் காட்டிலும், அதிக உற்சாகத்துடன், கோஷங்களைச் செய்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000284.wav |
மிதமிஞ்சி மதுபானம் செய்தவன் போலிருக்கிறது, என்ற பாவனையில், சிலர் பார்த்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000285.wav |
அச்சமயம், வீதியில், எதிர்ப்புறமாகத் தயிர்க் கூடையுடன் வந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீ, வேளைக்காரப் படைக்கு ஒதுங்கி, ஒரு சந்தில் நின்றாள். | 0 | data/tamil_tts_wavs/female_000286.wav |
இன்னும் இரண்டு மூன்று சந்துகள் புகுந்து, திரும்பிய பிறகே, ஓட்டத்தை நிறுத்தி, மெதுவாக நடக்கலுற்றான். | 0 | data/tamil_tts_wavs/female_000287.wav |
வந்தியத்தேவன், இப்போது புகுந்து சென்ற சந்துகளில், ஏற்கனவே, இருள் சூழ்ந்துவிட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_000288.wav |
இப்படி எண்ணிக்கொண்டே, சுவரின் மீது சாய்ந்துகொண்டு, வந்தியத்தேவன் உட்கார்ந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000289.wav |
அவன் தூக்கம் நீங்கிக் கண் விழித்த போது, சந்திரன் உதயமாகி, கீழ்வானத்தில், சிறிது தூரம் மேலே வந்திருந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000290.wav |
ஆ, இது கோட்டைச் சுவராயிருக்க முடியாது. | 0 | data/tamil_tts_wavs/female_000291.wav |
அல்லது, பெரியதொரு அரண்மனைத் தோட்டத்தின் மதில் சுவரோ, அண்ணாந்து பார்த்துக்கொண்டே, வந்தியத்தேவன் எழுந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000292.wav |
வயிற்றிலுள்ள குடல் மேலே, மார்பு வரை, விம்மி வந்து அடைத்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000293.wav |
என்ன ஐயா, சுவரில் சாய்ந்தபடி தூங்கிவிட்டாயா, எத்தனை தடவை கூப்பிடுகிறது, ஆ, இது வேதாளம் அல்ல. | 0 | data/tamil_tts_wavs/female_000294.wav |
அல்லது உண்மையில் நடப்பதா, அழகுதான், இன்னும், தூக்கம் கலையவில்லை போலிருக்கிறது. | 0 | data/tamil_tts_wavs/female_000295.wav |
ஜாக்கிரதையாக ஏறி வா, கீழே விழுந்து தொலைக்காதே, இப்படிச் சொல்லிக் கொண்டே, அப்பெண், சுவரின் உட்புறத்திலிருந்து, மெல்லிய மூங்கிலினால் ஆன ஏணி ஒன்றை எடுத்து, வெளிப்புறத்தில், சுவர் ஓரமாக வைத்தாள். | 0 | data/tamil_tts_wavs/female_000296.wav |
ஏணியில் முக்கால் பங்கு அவன் ஏறியபோது, அந்தப் பெண் மறுபடியும், நல்ல தாமதக்காரன் நீ, அங்கே இளைய ராணியம்மாள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000297.wav |
அப்போது நிலா வெளிச்சம், அவள் முகத்தில் அடித்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000298.wav |
அதனால் தான், அவளுடைய முகம், வேளக்காரப் படையினர் துரத்திய, தயிர்கூடைக்காரியின் முகம்போலத் தோன்றியும், அவன் சுவரிலிருந்து தவறி விழவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000299.wav |