text
stringlengths 13
771
| gender
int64 0
1
| audio_path
stringlengths 37
37
|
---|---|---|
அதற்குத் தகுந்தபடி, ஏதாவது கொஞ்சம் பேசி, வேஷம் போட்டால் போகிறது. | 0 | data/tamil_tts_wavs/female_000000.wav |
ஆனால், அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒன்றும், கிட்டவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000001.wav |
அப்படியும், பல்லக்கு கீழே வைக்கப்படவில்லை ஒரே மூச்சாகப் போய்க்கொண்டிருந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000002.wav |
கோட்டைக்குள் பல்லக்குப் போய்விட்டால், அப்புறம், அவன் எண்ணம், கைகூடப் போவதில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000003.wav |
எடுத்த காரியத்தை முடிக்காமல், உயிரோடு திரும்பிப் போவதில் என்ன லாபம். | 0 | data/tamil_tts_wavs/female_000004.wav |
நீ யார் அப்பா, திருவையாற்றிலிருந்து, எங்களை ஏன் தொடர்ந்து வருகிறாய், என்று கேட்டான். | 0 | data/tamil_tts_wavs/female_000005.wav |
இந்த சாலை, தஞ்சாவூருக்குத்தான் போகிறது. | 0 | data/tamil_tts_wavs/female_000006.wav |
ஆனால், இதில் முக்கியமானவர்கள் மட்டுமே போகலாம், மற்றவர்களுக்கு வேறு சாலை இருக்கிறது என்றான் வீரன். | 0 | data/tamil_tts_wavs/female_000007.wav |
அப்படியா, ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன் தான், என்றான் வந்தியத்தேவன். | 0 | data/tamil_tts_wavs/female_000008.wav |
அதைக் கேட்ட அவ்வீரன், புன்னகை செய்துவிட்டு, தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய் என்றான். | 0 | data/tamil_tts_wavs/female_000009.wav |
என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார். | 0 | data/tamil_tts_wavs/female_000010.wav |
அவருக்கு நோய் என்றறிந்து, பார்க்கப் போகிறேன் என்று கூறினான், வந்தியத்தேவன். | 0 | data/tamil_tts_wavs/female_000011.wav |
உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறார், அரண்மனையில் உத்தியோகம் பார்க்கிறாரா. | 0 | data/tamil_tts_wavs/female_000012.wav |
இல்லை, இல்லை, சத்திரத்தில் மணியக்காரராயிருக்கிறார், ஓகோ, அப்படியா, சரி, எங்களுக்கு முன்னால் நீ போவதுதானே. | 0 | data/tamil_tts_wavs/female_000013.wav |
ஏன் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறாய். | 0 | data/tamil_tts_wavs/female_000014.wav |
உடனே, அவன் மூளையை விரட்டிக் கண்டுபிடிக்க முயன்ற உபாயமும், புலப்பட்டுவிட்டது. | 0 | data/tamil_tts_wavs/female_000015.wav |
குதிரையைக் கால்களால் அமுக்கி, முகக்கயிற்றை இழுத்து, பல்லக்கின் பின், தண்டைத் தூக்கியவர்களின் பேரில், விட்டிடித்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000016.wav |
அவர்கள், பயத்துடன் திரும்பிப் பார்த்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000017.wav |
பல்லக்கை மூடியிருந்த திரை, சலசலத்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000018.wav |
என்று சொல்லிக் கொண்டே, அண்ணாந்து பார்த்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000019.wav |
தொண்டையில், திடீரென்று ஈரம் வற்றியது. | 0 | data/tamil_tts_wavs/female_000020.wav |
என்று, உளறிக் கொட்டினான். | 0 | data/tamil_tts_wavs/female_000021.wav |
அவனுடைய கையும், இயல்பாக, உறைவாளிடம் சென்றது. | 0 | data/tamil_tts_wavs/female_000022.wav |
ஆனால், கண்களை மட்டும் பல்லக்கின் பட்டுத் திரையின் மத்தியில், ஒளிர்ந்த மோஹனாங்கியின் சந்திர பிம்ப, வதனத்தினின்றும் அவனால் அகற்ற முடியவில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000023.wav |
பெண் என்றாலும், எப்படிப்பட்ட பெண். | 0 | data/tamil_tts_wavs/female_000024.wav |
நல்ல வேளையாக, அதே நிமிஷத்தில் வந்தியத்தேவனுடைய மூளை நரம்பு ஒன்று, அசைந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000025.wav |
அதை, உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000026.wav |
அதுகாறும் குவிந்திருந்த தாமரை மொட்டு, சிறிது விரிந்து, உள்ளே பதித்திருந்த வெண்முத்து வரிசையை, இலேசாகப் புலப்படுத்தியது. | 0 | data/tamil_tts_wavs/female_000027.wav |
அந்தப் புன்முறுவலின் காந்தி, நமது இளம் வீரனைத், திக்குமுக்காடித், திணறச் செய்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000028.wav |
இவளுடைய குரலில், அத்தகைய போதை தரும் பொருள், என்ன கலந்திருக்க முடியும். | 0 | data/tamil_tts_wavs/female_000029.wav |
ஏன், இக் குரலைக் கேட்டு, நமது தலை, இவ்விதம், கிறுகிறுக்க வேண்டும், சற்று முன்னால், நீ என்ன சொன்னாய். | 0 | data/tamil_tts_wavs/female_000030.wav |
காசிப் பட்டின் மென்மையும், கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும், ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா. | 0 | data/tamil_tts_wavs/female_000031.wav |
அவ்விதம் இதோ கலந்திருக்கின்றனவே, பல்லக்கைக் கொண்டு வந்து, அவர்கள், உன் குதிரைமீது மோதினார்கள் என்றா சொன்னாய். | 0 | data/tamil_tts_wavs/female_000032.wav |
ஆம், மகாராணி, இவர்கள் அப்படித்தான் செய்தார்கள், என் குதிரை மிரண்டுவிட்டது, என்றான். | 0 | data/tamil_tts_wavs/female_000033.wav |
குறுநகையின் நிலவு கோபக் கனலாயிற்று. | 0 | data/tamil_tts_wavs/female_000034.wav |
வேடிக்கை அப்புறம் இருக்கட்டும், உண்மையைச் சொல், எதற்காகப், பல்லக்கின் மேல், குதிரையைக் கொண்டு வந்து, மோதி நிறுத்தினாய். | 0 | data/tamil_tts_wavs/female_000035.wav |
இதற்குத் தக்க மறுமொழி, சொல்லித்தான் ஆகவேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000036.wav |
சொல்லா விட்டால், நல்லவேளையாக, ஏற்கனவே, அந்த மறுமொழி, வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாயிருந்தது. | 0 | data/tamil_tts_wavs/female_000037.wav |
அவன் தான், திருமலையப்பன். | 0 | data/tamil_tts_wavs/female_000038.wav |
கண்களில் வியப்பும், ஐயமும் தோன்றின. | 0 | data/tamil_tts_wavs/female_000039.wav |
நினைத்த காரியம், வெற்றி பெற்றுவிடும்போல் காண்கிறது, ஆனால் முக்கால் கிணறு தாண்டி பயனில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000040.wav |
தேவி, தேவி, கோட்டைக்குள் என்னை விடமாட்டார்களே, அரண்மனைக்குள்ளும் விடமாட்டார்களே, என்ன செய்வது, என்று பரபரப்புடன் சொன்னான். | 0 | data/tamil_tts_wavs/female_000041.wav |
வேடிக்கை பார்ப்பதெல்லாம், பிற்பாடு வைத்துக்கொள்ள வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000042.wav |
இந்த தீர்மானத்துடன் வந்தியத்தேவன், தஞ்சை நகரின் பிரதான வாசலை அணுகினான். | 0 | data/tamil_tts_wavs/female_000043.wav |
கோட்டை வாசலில், பிரம்மாண்டமான கதவுகள், அச்சமயம், சாத்தியிருந்தன. | 0 | data/tamil_tts_wavs/female_000044.wav |
வாசலண்டை காவலர்கள் மட்டும் நின்றார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000045.wav |
விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ள, வந்தியத்தேவன் ஆவல் கொண்டான். | 0 | data/tamil_tts_wavs/female_000046.wav |
வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல. | 0 | data/tamil_tts_wavs/female_000047.wav |
தம்பி, எல்லாரும் எதற்காக வீதி ஓரம், ஒதுங்கி நிற்கிறார்கள், ஏதாவது, ஊர்வலம் கீர்வலம் வரப் போகிறதா, என்று கேட்டான். | 0 | data/tamil_tts_wavs/female_000048.wav |
தாங்கள் இந்தப் பக்கத்து மனிதர் இல்லையா, ஐயா, இல்லை, நான் தொண்டை நாட்டைச் சேர்ந்தவன், அதனால்தான் கேட்கிறீர்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000049.wav |
வேடிக்கை பார்க்கத்தானே, ஆமாம். | 0 | data/tamil_tts_wavs/female_000050.wav |
நான் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் என்ன, பார்க்கலாம், ஆனால், வேளக்காரப் படை வீரர்கள், உங்களைப் பார்த்துவிட்டால் ஆபத்து. | 0 | data/tamil_tts_wavs/female_000051.wav |
குதிரையையும் ஆளையும் கொண்டு போனால், சும்மா விட்டு விடுவார்களா, விடாமல் என்ன செய்வது, வேளக்காரப் படையார், வைத்ததே, இந்த நகரில் சட்டம். | 0 | data/tamil_tts_wavs/female_000052.wav |
அவர்களைக் கேள்வி கேட்பார் கிடையாது. | 0 | data/tamil_tts_wavs/female_000053.wav |
கோட்டை வாசலின் கதவுகள் இரண்டும், படார் படார் என்று திறந்துகொண்டன. | 0 | data/tamil_tts_wavs/female_000054.wav |
செந்நிறமான அக் கொடியின் மேலே, புலியும், புலிக்கு அடியில், கிரீடமும், சித்தரிக்கப்பட்டிருந்தன. | 0 | data/tamil_tts_wavs/female_000055.wav |
இரண்டு ஆட்கள் நின்று பேரிகைகளை முழங்கினார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000056.wav |
ரிஷபத்துக்குப் பின்னால், சுமார் ஐம்பது வீரர்கள், சிறுபறை, பெரும்பறை, தம்பட்டம், ஆகியவற்றை முழங்கிக் கொண்டு வந்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000057.wav |
வீரப் புலிக்கொடி பாரெல்லாம் பரந்து வெல்க, வெல்க, வெல்க, வெற்றிவேல், வீரவேல். | 0 | data/tamil_tts_wavs/female_000058.wav |
எதிரில் வந்த ஒரு மாட்டுவண்டியை இன்னொரு வீரன் நிறுத்தி, மாட்டை வண்டியிலிருந்து, பூட்டு அவிழ்த்து விரட்டி அடித்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000059.wav |
இவர்களுடைய விளையாட்டு மற்றவர்களுக்கு வினையாக இருக்கிறது. | 0 | data/tamil_tts_wavs/female_000060.wav |
நல்ல வேளை, இவர்களுடைய பார்வை, நம்மீது விழாமல் ஒதுங்கி நின்றோம். | 0 | data/tamil_tts_wavs/female_000061.wav |
ஆனான், ஒரே ஒரு வித்தியாசமும் அவனுக்குப் புலனாயிற்று. | 0 | data/tamil_tts_wavs/female_000062.wav |
கூட்டத்திலும், கோலாகலத்திலும், அந்த வாலிபன் எங்கேயோ போய்விட்டான். | 0 | data/tamil_tts_wavs/female_000063.wav |
வேளக்காரப்படை, மாலையில், கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு, மற்ற யாரையும் உள்ளே விடுவதில்லையென்று வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். | 0 | data/tamil_tts_wavs/female_000064.wav |
சீக்கிரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டியதுதான். | 0 | data/tamil_tts_wavs/female_000065.wav |
வீதிகளெல்லாம், ஜே ஜே என்று ஒரே ஜனக்கூட்டம். | 0 | data/tamil_tts_wavs/female_000066.wav |
வெளியூர்களிலிருந்து, பல அலுவல்களின் நிமித்தமாக வந்தவர்கள், அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000067.wav |
பெரிய கோவிலா அது, இல்லை, சிறிய கோவில்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000068.wav |
ஆனால், என்று அந்த வாலிபன் தயங்கி நிறுத்தினான், ஆனால் என்ன. | 0 | data/tamil_tts_wavs/female_000069.wav |
போனால் போகட்டும், தம்பி, இரவு எங்கேயாவது நான் நிம்மதியாக தூங்க வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000070.wav |
அயல் நாடுகளிலிருந்து, வருகிறவர்களுக்கென்று ஏற்பட்ட ராஜாங்க விடுதிகளும் இருக்கின்றன. | 0 | data/tamil_tts_wavs/female_000071.wav |
ஆனால், உங்களுக்கு இஷ்டமாயிருந்தால். | 0 | data/tamil_tts_wavs/female_000072.wav |
ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது, என்னிடம் மந்திர வித்தை இருக்கிறது. | 0 | data/tamil_tts_wavs/female_000073.wav |
அதனால் தெரிந்து கொண்டேன். | 0 | data/tamil_tts_wavs/female_000074.wav |
உன் வீடு எங்கே இருக்கிறது, நகர எல்லையைத் தாண்டி, கூப்பிடு தூரத்தில் எங்கள் பூந்தோட்டம் இருக்கிறது. | 0 | data/tamil_tts_wavs/female_000075.wav |
தோட்டத்துக்குள்ளே எங்கள் வீடும் இருக்கிறது என்றான், அமுதன், ஆஹா, அப்படியானால் உன் வீட்டுக்கு நான் வந்தே தீருவேன். | 0 | data/tamil_tts_wavs/female_000076.wav |
பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000077.wav |
அரை நாழிகை நேரம் நடந்து, அவர்கள், நகர்ப்புறத்துக்கு அப்பாலிருந்த பூந்தோட்டத்துக்கு வந்து சேர்ந்தார்கள். | 0 | data/tamil_tts_wavs/female_000078.wav |
ஆனால், அந்த மாதரசியின் முகத்தில், கருணையும் அன்பும் நிறைந்து ததும்பியதை வந்தியத்தேவன் கண்டான். | 0 | data/tamil_tts_wavs/female_000079.wav |
கூரிய அறிவின் ஒளியும், அம்முகத்திலிருந்து வீசியது. | 0 | data/tamil_tts_wavs/female_000080.wav |
சற்று நேரத்துக்கெல்லாம், இலை போட்டு, அந்த அம்மாள், உணவு பரிமாறினாள். | 0 | data/tamil_tts_wavs/female_000081.wav |
முதலில், இடியாப்பமும், இனிப்பான தேங்காய்ப்பாலும் வந்தன. | 0 | data/tamil_tts_wavs/female_000082.wav |
பத்துப் பன்னிரண்டு இடியாப்பமும், அரைப்படி தேங்காய்ப் பாலும் சாப்பிட்டான். | 0 | data/tamil_tts_wavs/female_000083.wav |
பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், இவர்களின், மாளிகைகளும், பரிவாரங்களும் அங்கு இருந்தன. | 0 | data/tamil_tts_wavs/female_000084.wav |
கோட்டை வாசலில் நானே பார்த்தேன். | 0 | data/tamil_tts_wavs/female_000085.wav |
ஒரு வேளை, வழியில் எங்கேனும் தங்கி விட்டு நாளை வரக்கூடும். | 0 | data/tamil_tts_wavs/female_000086.wav |
ஷிவ பக்தியில் ஈடுபட்டுப், பெரும்பாலும் யோகத்திலும், தியானத்திலும், பூஜையிலும், காலம்கழிப்பதாகக் கேள்வி. | 0 | data/tamil_tts_wavs/female_000087.wav |
ஆனாலும், இத்தனை நாளைக்குப் பிறகு, கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே, ஆமாம், அது கொஞ்சம் வியப்பான காரியம்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000088.wav |
நமக்கென்ன அதைப்பற்றி, பெரிய இடத்துப் பேச்சு, பேசாமலிருப்பதே நல்லது. | 0 | data/tamil_tts_wavs/female_000089.wav |
தஞ்சையில் தங்க, இம்மாதிரி ஒரு வீடு அகப்பட்டதும், தன்னுடைய அதிர்ஷ்டந்தான். | 0 | data/tamil_tts_wavs/female_000090.wav |
அதையெல்லாம் கெடுத்துக் கொள்வானேன், மேலும், நீண்ட பிரயாணக் களைப்புடன் முதல்நாள் இரவு, கண் விழித்ததும் சேர்ந்துகொண்டது. | 0 | data/tamil_tts_wavs/female_000091.wav |
பாம்பும் ஆடிக் கொண்டேயிருந்தது, பாம்பு ஆடிய போது, அதற்கிணங்க, இவன் உடம்பும் ஆடியது, இதன் முடிவு என்ன ஆயிருக்குமோ தெரியாது. | 0 | data/tamil_tts_wavs/female_000092.wav |
இவர்களையெல்லாம் அடக்கி, நியாயத்தையும், தர்மத்தையும், நிலைநாட்ட அரசாங்கம் வேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000093.wav |
ஆம், இன்று சுந்தரசோழ சக்கரவர்த்தியைப் பார்த்தே தீரவேண்டும். | 0 | data/tamil_tts_wavs/female_000094.wav |
இதற்காகத்தான் அலங்கரித்துக் கொண்டானா, அல்லது, பழவூர் இளையராணியை, அன்று மீண்டும் பார்க்கப் போகிறோம், என்கிற எண்ணமும் அவன் மனதிற்குள் இருந்ததா, என்று நாம் சொல்ல முடியாது. | 0 | data/tamil_tts_wavs/female_000095.wav |
புதல்வி, என்று நிறுத்தினான், புதல்விக்கு என்ன, ஒன்றுமில்லை. | 0 | data/tamil_tts_wavs/female_000096.wav |
உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவானா, அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி. | 0 | data/tamil_tts_wavs/female_000097.wav |
ஆடு மாடுகளும், காட்டு மிருகங்களும், மெய்மறந்து நிற்கும். | 0 | data/tamil_tts_wavs/female_000098.wav |
இறைவன் என் முன்னால் தோன்றி, நீ சுந்தரமூர்த்தியைப் போல், இந்த உடம்போடு கைலாஸத்துக்கு வருகிறாயா. | 0 | data/tamil_tts_wavs/female_000099.wav |